அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத காலத்திற்குள் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் மாந்தோப்பு பகுதியில் தனது சித்தப்பாவின் சமாதிக்கு சென்றார். திரும்பும் வழியில் அவரை, மூர்த்தியின் கும்பல் அங்கு வழிமறித்து பழிக்குப் பழியாக சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் மூர்த்திக்கு உதவி செய்த ஜெயராமமூர்த்தி, அருண்குமார் ஆகியோரை மல்லாங்கிணறு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மூர்த்தி, முத்துக் கண்ணன், தவமணி, ராசாத்தி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.