வாலிபரை சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியை சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு லால்குடியைச் சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர்தான் காரணம் என ஹரி நினைத்துள்ளார்.
இதனால் ரவி பிரகாஷை பழி வாங்குவதற்காக ஹரி, அவருடைய நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து ரவி பிரகாஷை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரவி பிரகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக லால்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.