சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் இலந்தைபழ மரம் வளர்த்து வருகிறார். இந்த மரத்தில் பழம் பறிப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகள் தோட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தோட்டத்திற்கு வந்த 8 வயது சிறுமியை இளங்கோவன் தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.