பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு காலமானார். இதனை மிதிலேஷின் மருமகன் ஆஷிஷ் சதுர்வேதி சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார். மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார்.
ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட மிகப்பெரிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அவர் பல விளம்பரங்கள் மற்றுதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இணைய நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்த குலாபோ சிதாபோ தான் இவர் நடித்த கடைசி படம்.