Categories
உலக செய்திகள்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு…. பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான், “லதா மங்கேஷ்கரின் மறைவால் துணை கண்டம் உலகம் அறிந்த சிறந்த பாடகர்களில் ஒருவரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கும் இவரது பாடல்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |