Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா நாட்களில் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மின்இழுவை ரயில், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கோவிலில் இருக்கும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.

Categories

Tech |