வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பழனிமுருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் கூட்டமானது அதிகளவு காணப்பட்டது. அதிலும் குறிப்பாக அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் மலைக் கோயில், அடிவாரம் மற்றும் கோயிலுக்கு போகும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
அதேபோன்று மின்இழுவை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து கோயிலுக்கு சென்றனர். இதனிடையில் பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், முடிக் காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டனர். அதன்பின் திரு ஆவினன்குடி பகுதியிலுள்ள நிலையத்தில் முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி, பாதவிநாயகர் கோயில் ஆகியவற்றிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.