மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்ல மாவட்டத்தில் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு கடந்த 15ம் தேதியன்று ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழா தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த விழா சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன் பிறகு பேசிய முதல்வர், மண்ட்லா பகுதியில் மன்னர் ஹீர்தே ஷா என்ற பெயரில் மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும். பழங்குடியின மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தும் விரைவில் ரத்து செய்யப்படும். இங்குள்ள இளைஞர்கள் இராணுவப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பயிற்சி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பழங்குடியின மன்னர் சங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா ஆகியோர்கள் சிலை நிறுவப்படும். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுது. ஆனால் மீதமுள்ள 11 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 21% பட்டியின பழங்குடி இன மக்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.