சென்னை கண்ணகிநகரை சேர்ந்த 14 வயது சிறுமி அங்கு இருக்கக்கூடிய பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பள்ளி விடுமுறை காரணமாக பெரம்பலுார் மாவட்டம் அருமடல் கிராமத்தில் வசிக்கும் அண்ணன் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் வேலைக்குச் சென்றதால் அவர்களது 3 வயது குழந்தையை கவனித்துக் கொண்டு சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அன்றுமாலை வேளையில் வீட்டிற்குள் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள், சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் இரவு வீட்டுக்கு வந்த அண்ணனிடம் நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து உறவினர் அளித்த புகாரின்படி அருகிலுள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ராம் (20), காமேதஸ்வர்சிங் (19), பெருநாகசியா (20) போன்றோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.