திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணி தக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக மாணவி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
பின்னர் சக நண்பர்கள் உணவு சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீண்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி சம்பவம் மனதை விட்டு நீங்குவதற்குள் அடுத்து ஓர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.