கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 19ஆம் தேதி வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடம் நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.