தேனியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகராஜ் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியுடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவியை நாகராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் காவல்துறையினர் நாகராஜை கைது செய்து மாணவியை பெற்றோர்களிடம் மீட்டு கொடுத்தனர்.