Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியிடம் திமுக பிரமுகர் சில்மிஷம்…. மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தனியாக சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கு மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முத்துசாமியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |