Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ரவுடி…. அடித்து உதைத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை பெண்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, மல்காபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னராவ் என்பவர் தன்னை ஒரு சமூக ஆர்வலர் போல காட்டி, பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்துள்ளார். இதையடுத்து மாணவிகளை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அந்தப் பகுதி மக்கள் சின்னாராவின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சின்னராவை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து சின்னராவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |