கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால் பேருந்துகளில் கூட்டநெரிசலில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் தனியாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு காலை மாலை என்று இரண்டு வேளைகளில் இரண்டு பேருந்துகள் இயக்க அரசு பேருந்துகள் இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் எளிதாக பயணிப்பது மட்டுமல்லாமல் கூடுதல் கவனத்தோடு படிப்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.