டெல்லியில் பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொங்கலுக்கு பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் பள்ளி மாணவர்கள் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் பொழுது பள்ளி மாணவர்களின் புத்தக பை 3.5 கிலோவிலிருந்து 5 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் அதிக எடை சுமப்பதால் இளம் வயதில் முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.