ஏப்ரல் 14 ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.
”தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு 19.04.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கி நடைபெற இருக்கிறது. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவுள்ளது. ஆக மொத்தம் 24,000 ரூபாய்க்தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அதில் கூறப்பட்டிருக்கிறது.