தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான சாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஜாதி மற்றும் இனம் ஆகிய விவரங்களை எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் தலைமை ஆசிரியர் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில சாதிகளின் பெயர்களை மட்டும் திருத்தம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் வன்னியர் பிரிவில் வரும் சாதிகளை எம்.பி.சி. பிரிவில் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பட்டியலில் உள்ள கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரையான் ஆகிய சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.