தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கற்றல் எட்டா கனியாகவே இருந்தது. ஏனென்றால் ஸ்மார்ட் ஃபோன்களை விலை கொடுத்து வாங்கி கற்க முடியாத சூழல் விலகியது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வழிகாட்டுதலின்படி குறுவல மைய தலைமை பள்ளிகளில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கலந்த ஆலோசனை நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கணிதவியல், இயற்பியல், வேதியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் பாடவாரியாக தனித்தனி வகுப்பறைகளில் ஆலோசனை நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக மாணவர்கள் மீது இணைய வழி விளையாட்டுக்களின் தாக்கம் இருப்பதால் அந்த பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கு அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் உதவும் வகையில் இணைய வழி விளையாட்டுகளின் தாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ஆசிரியர்கள் தங்கள் EMIS மூலம் பதில் வழங்கினர்.