பெங்களூரில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் பேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும்.
இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும் காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் நிறுத்த அனுமதி கிடையாது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளி பேருந்துகள் மாணவர்களை காலை 8.15 மணிக்குள் இறக்கி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.