Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்… முதன்மை செயலர் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோல் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் சி அமுதவல்லி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் பணியிடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கே. சசிகலாவிற்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கியும் தற்போது அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் செல்வகுமார் வசம் இருக்கும் பொது நூலக இயக்கக இணை இயக்குனர் பணியிட கூடுதல் பொறுப்பு சி அமுதவல்லிக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 98 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். 98 டிஇஓக்கள் இதே போல் பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் என மொத்தம் 152 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அவைகளில் பணியாற்றும் 98 மாவட்ட கல்வி அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

Categories

Tech |