Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தலைவர்களின் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பேச்சு போட்டிகள் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்திருந்தார். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், ஜவர்கலால் நேரு போன்றோரின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையில் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாகரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என பரிசித் தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்பட உள்ளன. இவை தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வீதம் சிறப்பு பரிசு வழங்கப்பட இருக்கிறது.

போட்டி நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும்.மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இப்போட்டிகள் நடத்தப்படும். இந்த பேச்சுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேறு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |