தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் அரசு தரப்பிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. என் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களும் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபாயும், 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4000 ரூபாயும், இளங்கலை பட்டம் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6000 ரூபாயும், முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 7000ரூபாயும் வருடம் தோறும் கல்வி உதவி தொகையாக அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது.
இதனைத் தவிர 75 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும் வாசிப்பாளர் ஆகியோருக்கு உதவித்தொகையாக 9-12 ஆம் வகுப்பு வரை 3000 ரூபாயும்,இளங்கலை பட்டம் பட்டய படிப்பு பய்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும்,முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு 6000 ரூபாயும் வருடம் தோறும் வழங்கப்படுகிறது.
அரசு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள், 9 ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகல்,பார்வையற்ற மாணவர்கள் வாசிப்பாளரின் விவரம் ஆகிய சான்றிதழ்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஒப்படைத்து இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.