டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை கல்வி நிறுவனங்களை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.