சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாபு(47) என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அடுத்ததாகவும், அதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கும் முயன்றதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.