திருவையாறு பகுதியில் 10 வகுப்பு சிறுமியை கர்பமாக்கிய சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி .அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியும், பத்தாம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவணுக்கும் காதல் ஏற்பட்டு ,நெருங்கி பழகியதாக தெரியவந்தது. இந்த சம்பவ தினத்தன்று பள்ளியில் இருந்த மாணவி திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதனை போது அவர் ஐந்து மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாயார் திருவையாறு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு காரணமான சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.