Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் தொழுகை…. மீண்டும் வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்  தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்காதர்கா என்ற பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடந்தது. அதைப்போல் இந்த பள்ளியில் உள்ள முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவால் பிற மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இது குறித்து வட்டார கல்வித்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். இதனை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் கடந்த 4ஆம் தேதி அன்று விளையாட்டு பிரிவு நேரத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்ததாக ஆசிரியர்கள்  தெரிவித்தனர்.

ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் இந்த காரணத்தை ஏற்க மறுத்தனர். பள்ளி நேரத்தில் தொழுகை செய்தது அரசு உத்தரவை மீறுவதற்கு சமம். இவ்வாறாக, ஆசிரியரிடம் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரி லோகேஷ் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். இதில் இந்த மாணவிகள் தொழுகை செய்தது தொடர்பாக  விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்  பட்டிருந்தது.

Categories

Tech |