இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றின் முன் ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களை கண்ட நபர் ஒருவர், பள்ளிகளுக்கு முன் இப்படி ஒரு அசிங்கமான போஸ்டரா என அவற்றை கிழித்து ஏரிந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.