தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமக்ர சிக்ஷ திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ரூ.3,725 கோடியில் இருந்து ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் கல்விச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.