இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு விரைவில் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பலாம் என மத்திய அமைச்சர் ராஜேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத்தேர்வுகளுக்கும், நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும். மாணவர்கள் கோரிக்கையை பொருத்து ஆன்லைன் மூலமாக 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.