தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் இருந்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.