தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்ததால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை முடிவடைந்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.