பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைக்க கோரிய வழக்கில், பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அவசியம். பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கியகுழு அமைக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.