Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ…. ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அந்தோனியார் தெருவில் மகேந்திரன்(55) -இசக்கியம்மாள்(49) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மகேந்திரன், இசக்கியம்மாள், அவர்களது மகள் இந்துமதி(25) ஆகியோர் ஒரு ஆட்டோவில் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலை வழியாக சென்றனர். இந்த ஆட்டோவை மலரகன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.

அப்போது பலத்த காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |