சீனாவில் எண்ணெய் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
சீனாவில் Symphony என்ற எண்ணைய் கப்பல் மீது Sea Justice என்ற சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியளவில் Qingdao கடலில் கப்பல்கள் நிறுத்திமிடத்தில்Symphony எண்ணெய் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது அப்போது அங்கு வந்த Sea Justice என்ற சரக்கு கப்பல் அதன் மேல் மோதியது. இந்த விபத்தால் கப்பலில் இருந்த எண்ணெய்கள் கொட்டி கடலில் கலந்துள்ளது.
இதில் ஒரு மில்லியன் எண்ணெய் குடுவைகள் இருந்தது என்றும் குறிப்பிட்ட அளவு கடலில் கலந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.