Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரோகிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியான தினேஷ்குமார் என்பவர் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகிணி தினேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக ரோகிணி தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தினேஷ் குமார் 2 கார்கள் வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக 2 லட்ச ரூபாய் பணத்தை ரோகிணியிடமும், 12 லட்சம் பணத்தை அவரது கணவர் சந்துருவின் வங்கி கணக்கிலும் தினேஷ் செலுத்தி இருக்கிறார். இதனை அடுத்து நண்பர்களுக்கு 2 கார் தேவை என கூறி 10 லட்ச ரூபாய் பணத்தை தினேஷ்குமார் சந்துருவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ரோகிணி கார்களை கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ்குமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி நடித்து ரோகிணி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரோகிணியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புதுப்பட்டியில் பதுங்கி இருந்த சந்துருவை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Categories

Tech |