Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள செடிகள் நாசம்…. அட்டகாசம் செய்யும் யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று அதிகாலை அகலக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் நர்சரி பண்ணைக்குள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செடிகளை நாசப்படுத்தியுள்ளது. பின்னர் காட்டு யானைகள் ஜவளகிரி சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே கிராமத்திற்குள் விலங்குகள் நுழைவதை தடுக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |