Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத வச்சுத்தான் நான் என் வாழ்க்கைய நடத்தனும்…. இப்படி பண்ணிட்டிங்களே…. சமூக ஆர்வலர்களின் கருத்து..!!

ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று பார்த்தபோது மடிக்கணினி, கேமரா மற்றும் பணம் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் திருட்டு போயிருந்தது. மேலும் இந்த ஸ்டுடியோவில் ஏற்கனவே ஒரு முறை பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இதே போன்று திருடப்பட்ருடிந்தது. இது இரண்டாவது முறை என்பது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து ராஜமாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.  மேலும் இந்த பகுதியில் திருட்டு சம்பவம் அதிகமா நடப்பதால் காவல் துறையினர்  தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |