Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… மருத்துவ அற்புதங்கள் தரும் தர்பூசணி…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் தர்பூசணியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடலுக்கு அதிக சத்துக்கள் தரக்கூடியவை. அதில் பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியவை. அவ்வாறு பல சத்துக்களைத் தரும் தர்பூசணியில் நிறைந்துள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தற்போது தர்பூசணி சீசன் தொடங்கிவிட்டது. இந்தப் பழம் சிறுநீரக கற்களை கரைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். பித்தம், சிறுநீர் எரிச்சல் மற்றும் நாக்கு வறட்சியையும் உடனே போக்கும். இதயத்தை பலப்படுத்தும். எலும்பு மூட்டு வலியிலிருந்து நிவாரணம் உண்டாகும். சருமம் மற்றும் தலைமுடி பொலிவுக்கு நல்லது. இயற்கையான குளுக்கோஸ் இதில் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

Categories

Tech |