அயோத்தியாபட்டணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மண்டல செயலாளர் காசி மன்னன், சேலம் நாடாளுமன்ற மண்டல செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளர் பூவரசன் தொகுதி செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமாநில தொழிலாளர்கள் தமிழக போலீசாரை தாக்கிய கண்டித்தும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாழப்பாடி பகுதியில் நடக்கும் கனிமவள கொள்ளையை கண்டித்தும், அதை தடுப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினார்கள்.