திருச்சியில் விவசாய சங்கம் சார்பாக உற்பத்தி செய்த காய்கறி பழங்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழக விவசாய சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தலைவர் ம.ப சின்னத்துரை தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் விவசாய சங்க மகளிர் அமைப்பு நிர்வாகி விமலா, தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ராஜா, தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த வக்கீல் கென்னடி, ஜனநாயக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழக நிர்வாகி உட்பட பல விவசாயிகளும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் காய்கறிகள், தானியங்கள், பழங்கள், நெல், பயிர் வகைகள், பூஞ்செடிகள், சுரைக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய் உட்பட விவசாய உற்பத்தி பொருட்களை ஏந்திக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். குடமுருட்டி, ஆழியாறு, திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், கோரை ஆற்றின் வெள்ளை பாதிப்பில் இருந்து திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை காப்பாற்றுவதற்கு நிரந்தர பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கி தடுப்பணைகளை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை அரசு பின் பின்புலத்துடன் கொள்ளையடிப்பத்தை தடுத்தி நிறுத்தி தரிசு நிலங்களை மீட்டெடுத்து பொது பயன்பாட்டுக்கு உடனே கொண்டுவர வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலையை நிர்ணயித்து அவர்கள் கடனாளி ஆகாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.