தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சி சார்பாக எம்.எல்.ஏ-வை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சி சார்பாக எம்.எல்.ஏ கருமாணிக்கம் நேரில் சந்தித்து மனு அளித்தார்கள். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, தொண்டி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக இருக்கும் மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் தொண்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் சையது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் திருவாடனையிலிருந்து தொண்டி வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும் தொண்டி- திருவெற்றியூர் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்த மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.