பிரிட்டன் மகாராணி எலிசபெத் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உரை நிகழ்ச்சியில் பல எம்.பிகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்ச்சியில் மகாராணி எலிசபெத் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மே 17-ம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மகாராணியாரின் வருடாந்திர உரை நடத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது மகாராணி நாடாளுமன்றத்துக்கு குதிரை வண்டியில் வருவது வழக்கம். மேலும் அடுத்த 12 மாதங்களில் முன்மொழியப்பட்ட சட்டங்களை மகாராணி எலிசபெத் வகுப்பார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பிரிட்டனில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பல எம்.பிகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகையால் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு போலவே பல கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் காமன்ஸ் சபாநாயகர் Sir Lindsay Hoyle ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற நிழச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், 38 மணி நேரம் சுயமாக தனிமைபடுத்தி கொள்ளவேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.