Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக நடைபெறும் தாக்குதல்கள்…. போராட்டத்தில் குவிந்த போராட்டக்காரர்கள்….. துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்….!!!!

பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரபல நாடான இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் பாலஸ்தீனம் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு  வருகிறது. ஹமாஸ் அமைப்புகள் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் ஈடுபடுவதால் அந்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மேற்குகரையின் நப்லஸ் நகரின் சில பகுதிகள் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த பகுதிகளை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு  நிர்வாகித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பாலஸ்தீன காவல்துறையினர் நப்லஸ்  நகரில் சோதனை செய்தனர். அப்போது போராளிகள் குழுவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்

முஷப் ஷயத் மற்றும் அமீத் தலிபிஹ்  ஆகியோர் என்பதும்  ஆயுதமேந்திய  அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அதில் ஒருவர் இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும்  காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போராட்டக்காரர்கள் 2  பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  கூறி கோஷம் எழுப்பினர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் பிரஸ் யாஷ்  என்பவர் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மேலும் சிலர் இந்த வன்முறையில் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் மேற்கு கரையின் நப்லஸ் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Categories

Tech |