பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருக்கின்றார். அதில் நபிகள் நாயகம் பற்றி தான் தெரிவித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றுக் கொண்ட பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜர் ஆவதில் ஆபத்து இருப்பதால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் சூரியகாந்த், ஜே பி பார்வதி வாலா போன்றோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நுபுர் சர்மா சார்பில் மூத்தவக்கில் மணிந்தீர் சிங் ஆஜராகி அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார். இதனை அடுத்து நீதிபதிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நுபோர்ட் சர்மா சென்று தடை பெற வேண்டும் என நினைக்கவில்லை. மேலும் அவரது மனுவிற்கு பதில் அளிக்க மத்திய அரசிற்கும் டெல்லி போலீஸ், மராட்டியம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநிலங்களுக்கு உத்தரவிடுகின்றோம். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கின்றோம். அதுவரை நுபு சர்மாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கின்றோம் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.