Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்… சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மட்டும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கார்டு வழங்க வேண்டும் என்றும், 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் திருமுருகன் மற்றும் வருவாய் துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் அதில் எவ்வித தீர்வும் கிடைக்கததால் தேனி மாவட்ட சப்-கலெக்டர் ரிஷிப் சம்பவ இடத்திற்கு சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் தாலுகா அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |