Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. டாஸ்மார்க் பணியாளர்களின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பணியாளர்கள் கூறும் போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் பணியாளர் துளசிதாசன் கொலை செய்யப்பட்டதோடு, விற்பனையாளர் ராமு படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஈச்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கோபி சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், வாரிசு வேலை  வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, பிரச்சார செயலாளர் ஜி. மாரிமுத்து, தென்காசி மாவட்ட தலைவர் கண்ணன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்துள்ளனர். மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Categories

Tech |