பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மின்வாரிய துறையில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பான மின் வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தையும் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும்.
மேலும் 1.4.2003- ஆம் ஆண்டுக்கு முன்பும், பிறகும் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய வழங்கிட வேண்டும். மேலும் மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைகளை சரிசெய்து 70 வயது பூர்த்தியாகி ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத்தில் உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் உமாநாத், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி, மாவட்ட பொருளாளர் அற்புதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.