பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய மீனவர் பேரவை மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டுமென்றும், நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 உயர்த்தி வழங்கப்பட வேண்டுமென்றும், அரசு நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.