பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஓன்று உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து ஒளிந்திருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மர்மநபர் உயிரிழந்திருந்ததை கண்ட அதிகாரிகள் அவர் தற்கொலை செய்திருக்க கூடும் என கூறியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 12 பேரில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.